November 23, 2011

என்ன விலை அழகே!!!




November 21, 2011

Aliaa Magda Elmahdy – என்ற தைரியசாலி (அ) பைத்தியக்காரி


பதின்ம வயது முடிந்து 20 –ம் பிறந்த நாளில் நாம் என்ன செய்திருப்போம். கோவிலில் நம் பெயருக்கு ஒரு அர்ச்சனை, நண்பர்களுடன் கொண்டாட்டம், காதலன் காதலியுடனோ, காதலி காதலனுடனோ எங்காவது ஊர் சுற்ற, மற்றும் இதர லட்சத்தி பதினெட்டு வழிகளிலும் முயலுவோம். 



ஆனால் ஒரு 20- பிறந்த நாளில் உலகையே தன் பக்கம் திருப்பவேண்டும் என எண்ணியிருப்போமா? பெண்கள் ஒடுக்கப்பட்ட சமுகத்தில் ஓங்கி அடித்தாற்ப்போல ஒரு கருத்து சொல்லவேண்டுமென நினைப்போமா?

ஒருத்தி நினைத்தாள்!! அவள் பெயர் அலிகா மக்தா எல்மஹ்டி. 20 வயது எகிப்திய ஒரு பெண்ணியவாதி, பதிவர்!, நாத்திகவாதி என்று தன்னைப்பற்றி கூறுகிறாள். 
தன்னைத்தானே நிர்வாணமாக புகைப்படமெடுத்து 

"Put on trial the artists' models who posed nude for art schools until the early 70s, hide the art books and destroy the nude statues of antiquity, then undress and stand before a mirror and burn your bodies that you despise to forever rid yourselves of your sexual hangups before you direct your humiliation and chauvinism and dare to try to deny me my freedom of expression."


என்று சொல்லி ஒரு வலைப்பூவில் பதிவேற்றினாள். இன்று உலகமே அந்த வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறது!! பைத்தியக்காரத்தனம் என்று சில பேர் கருத்து கூறுகிறார்கள். அவள் தைரியசாலி என்கிறார்கள் சிலர்.
 இதுபற்றி #NudePhotoRevolutionary என்று ட்விட்டரில் தனி விவாதமே நடக்கிறது.
இதுவரை 37 லட்சம் ஹிட்டுகளைத்தாண்டி(!!!) சென்று கொண்டிருக்கிறது அவளது வலைப்பூ http://arebelsdiary.blogspot.com

சி.என்.என் ல் வந்த அவளது நேர்காணல் சுட்டி

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


November 18, 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம் – சினிமா விமர்சனம்


படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவிட்டால் பாழாய் போவது இந்த சமூகம் தான் என்று கூறும் நாஞ்சில்நாட்டு உண்மைக்கதை!!




சாராயக் கடத்தல் தொழிலையே ஆதாரமாகக் கொண்ட குமரி மாவட்டத்தில் வாழும் சுந்தரம்(கரண்) ஒரு பி.ஏ., பி.எட்., பட்டதாரி. அவன் கனவு ஒரு நல்ல அரசு வேலையில் சேர்வது. தன் வீட்டில் விவசாய பட்டதாரியான ஒருவரை குடி வைக்கிறான். வறுமையில் வாடும் அவர், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்கிறார். இந்த சம்பவம் சுந்தரத்தின் நல்லெண்ணத்தை அசைத்துப்பார்க்கிறது.

’சாலை’ (சரவணன்) கள்ளகடத்தல் பொருட்களைக் கடத்தும் ஒரு லாரி டிரைவர். ஒரு எதிர்பாரா சமயத்தில் சிறையில் மாட்டிக்கொள்ளும் சுந்தரத்தின் உயிரைக் காப்பாற்றி சுந்தரத்தின் நண்பனாகிறான். பின் ஒரு கடத்தலின் போது நன்றிகடனாக ’சாலை’யின் உயிரைக் காக்கிறான்.


லூர்து மேரி (அஞ்சலி) சுந்தரம் படித்த கல்லூரியில் படிக்கும் மாணவி. சுந்தரத்தின் நல்ல கல்வி அறிவால் ஈர்க்கப்படுகிறாள். காதல் வயப்படுகிறாள்.
காதல் கனிய நமக்கு ஒரு நல்ல டூயட் பாடல் கிடைக்கிறது!!
’சிலுவை’ லூர்து மேரியின் அப்பா. 28 வருடமாக சாராயத்தொழில் கொடிகட்டி பறப்பவர். தன் மனைவியையும், நண்பர்களையும் கொன்றவனை உயிருடன் காரில் வைத்து கொன்று, அதே காரில் குழி தோண்டி புதைத்துவிடுகிறான்.

சுந்தரத்தின் அப்பா வீட்டின் மீது வாங்கிய வங்கிக்கடனுக்கு சுந்தரத்தின் வீடு ஏலத்தில் விடப்படும் என்று ஓலை வருகிறது. 11 நாள் கெடுவில் வீட்டை மீட்டுக்கொள்ள வங்கி ஊழியர்கள் கூறுகிறார்கள். பணத்திற்க்காக பல பக்கம் அலையும் சுந்தரத்திற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இறுதியில் தான் எந்த தொழிலுக்கு வரக்கூடாது என்று எண்ணுகிறானோ அதே கடத்தல் தொழிலில் ஈடுபட வேண்டியதாகிறது. 28 வருடமாக அதே தொழிலில் இருக்கும் சிலுவை சுந்தரத்தை என்ன செய்தார்? தன் மகளின் காதலை ஏற்றுக்கொண்டாரா? சுந்தரத்தின் அரசு வேலைக்கனவு நிறைவேறியதா? என்ற கேள்விகளுக்கு விடை திரையில் காண்க…

வெட்டொத்தி சுந்தரமாக வாழ்ந்திருக்கிறார் கரண். மலையாள வாசம் கலந்த தமிழில் அவர் பேசும் போது ’குமரி மாவட்டத்துகாரார்’ என சொல்ல தோன்றுகிறது! அஞ்சலிக்கு அல்வா சாப்பிடுவது போல் ஒரு கதாப்பாத்திரம். ஏற்கனவே ‘அங்காடித் தெரு’ வில் வாழ்ந்த அனுபவம் கை கொடுக்கிறது. தன் தோழியிடம் ”ஏன் கரணை காதலிதேன்?” என்று கூறும்போது நடிப்பில் மிளிர்கிறார். சரவணன்க்கு மீண்டும் ஒரு நல்ல எண்ட்ரி. தன்னால் வீட்டை மீட்க பணம் கொடுக்க முடியவில்லை என்னும் போது இவரின் நடிப்பு நம்மை கவர்கிறது. கஞ்சா கருப்பு படத்தில் இருக்கிறார். சிலுவையாக நடித்து இருப்பவர் நம்மை தன் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார்!! ’நந்தா’ சரவணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசை வித்யாசாகர். கொலைகாரி… பாடல் முனுமுனுக்க வைக்கிறது. மற்றபடி பாடல்களில் வித்தயாசம் இல்லை! எழுதி இயக்கியவர் வி.சி. வடிவுடையான். தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வரவு!
இந்தப்படம் குமரி மாவட்ட மக்களின் நட்பு, காதல், துரோகம், பழக்கம், பற்றி பேசுகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் இந்த படம் ஒரு நல்ல பொழுதுப்போக்கும் சித்திரமாக இருக்கும்!!

துணுக்கு: மு.க வின் பேரன் அறிவுநிதி படத்தின் இறுதியில் கவுரவ கதாப்பாத்திரத்தில் வருகிறார்