January 15, 2012

நண்பன் - ஷங்கர் - ராஜா3 இடியட்ஸ் -ன் பிரமாண்ட வெற்றிக்கு காரணம் திரையில் இருக்கும் கதாபாத்திரத்தின் உணர்வுகள் நமக்கும் பிரதிபலிப்பதே. அவர்கள் சிரிக்கும்போது நாமும் சிரித்து அவர்கள் அழும் போது நாமும் அழுது இருப்பது அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம். 40 வயதிற்கும் அதிகமான ஆமிர்கானை முதலாம் ஆண்டு பொறியியல் மாணவனாக நாம் ஏற்று கொள்ளும் படி அவரது நடிப்பும் உருவமும் இருந்தது. இந்திய கல்வி முறையை வன்மையாக சாடும் ஒரு படமாக இருந்தது. வெறும் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பதை நருக்கு தெறித்தால் போல் கூறிற்று..எந்திரன் படவேலையில் பூனெவில் இருந்தபோது 3 இடியட்ஸை பார்த்து, அவர்க்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை தமிழர்களுக்கு சொல்ல மொழிமாற்றம் செய்ய முடிவு செய்தார் ஷங்கர். முதலில் விஜய், பின்னர் சூர்யா, பின்னர் மகேஷ்பாபு, இறுதியில் விஜயே ஒப்பந்தமானது வரலாறு!

கஜினியில் ஒரு வசனம் வரும் ‘எனது பொழுதுபோக்கு, தொழில் இரண்டுமே ஒன்றுதான்’ என்று... அவ்வாறு அமைவதே சொர்க்கம். மற்றவர்கள்/பெற்றவர்கள் கனவின் பின் செல்லாமல், தன் கனவை தொடர்ந்தால் வாழ்க்கை வளமாகும். இதையே கருவாக கொண்டு உருவானதே ’நண்பன்’. 3 இடியட்ஸ் 100% என்றால், நண்பன் 70% பெறுகிறது என்பது என் கருத்து.

வெங்கடராமகிருஷ்னன் (ஸ்ரீகாந்த்) பிறந்த உடனே அவனை பொறியாளன் ஆக்குவதே எனது ஆசை என்று அவர் அப்பா கூறுகிறார். அதேமாதிரி ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு அடியெடுத்து வைக்கிறான் வெங்கட். அதே போல இன்னோருவன் செந்தில் (ஜீவா). ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன். அதனால் தன்னைவிட கடவுள் அருளாலும் எல்லாம் நடக்குமென எல்லா கோவில் கயிறயும் கையில் கட்டி கொள்கிறான். இங்கே தான் இவர்கள் இருவருக்கும் அறிமுகமாகிறான் பஞ்சவன் பாரிவேந்தன் (விஜய்). ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவன். தன் மனம் சொல்வதை கேட்பவன். பொறியியலில் ஆர்வம்மிக்கவன். இவர்களின் கல்லூரி முதல்வர் விருமாண்டி சந்தனம் (சத்யராஜ்). மிகவும் கண்டிப்பானவர்.

வெறும் புத்தக படிப்பு மட்டும் ஒரு பொறியாளனை உருவாக்காது, அது சார்ந்த அனுபவ படிப்பும் மிக முக்கியமென தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் கூறுகிறான் பாரி. கல்லூரி முதல்வரின் மகளான ரியா(இலியானா) பாரியின் துருதுருப்பான நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு காதல் கொள்கிறாள். அவ்வாறே பாரியும். இந்த வேலயில் தேர்வுகளில் முதலாவதாக வருகிறான் பாரி. அது முதல் மதிப்பெண்கள் பெறுவான் என்று எதிர்பார்க்கப்பட்ட சைலன்சரை (சத்யன்) அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
 பாரியின் துரு துரு நடவடிக்கையால் முதல்வரின் வெறுப்பை சம்பாதிக்கிறான்.


இவ்வேளயில் விருமாண்டியின் வீட்டுக்கு சென்று, தனது காதலை ரியாவிடம் வெளிபடுத்துகிறான் பாரி. மேலும் அங்கே செந்தில், வெங்கட்டின் சேட்டைகளால் கடுப்பாகிறார் விருமாண்டி. செந்தில், வெங்கட் வீடுகளுக்கு கடிதம் எழுதுகிறார் விருமாண்டி.. பிறகு நடந்தது என்ன என்பதை திரையில் காண்க...

பாரியாக விஜய் தனது கதாப்பாத்திரத்துக்கு முடிந்தவரை நியாயம் செய்து இருக்கிறார். பஞ்ச் வசனங்கள், ஓப்பனிங் பாடல், மசாலா சண்டை என எதுவும் இல்லாத(!!) முற்றிலும் மாறுபட்ட விஜய் படம். தன்னை முழுதும் ஷங்கரிடம் ஒப்படைத்திருக்கிறார். ஸ்ரீகாந்த், ஜீவா இருவரில் ஜீவாவே ஸ்கோர் செய்கிறார். இந்த மாதிரி ஒரு மல்டி ஸ்டார்ஸ் உள்ள படங்களில் நடிக்க ஒத்துகொண்டதற்கு விஜய் ஜீவா இருவரயும் பாராட்டலாம்..

சப்பி போட்ட ஐஸ்குச்சி போல இருக்கிறார் இலியானா. எதற்கு இவரை கதானாயகியாக தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. பாடல்களில் மட்டும் நன்றாக ஆடுகிறார். ஸ்ரேயாவின் இடத்தை இவர் நிரப்புவார் என்று எதிர் பார்க்கலாம்.

வழக்கமான சத்யராஜை இதில் பார்க்க முடியவில்லை. வழக்கத்திற்கு மீறிய சத்யனை எதிர்பார்க்கலாம் . மனுசன் பின்றார். வெல்கம் சத்யன்.

அஸ்கு லஸ்கா, என் பிரண்டைபோல பாடல்கள் முனுமுனுக்க வைக்கும் ரகம்.

படத்தின் மிகப்பெரிய குறை, இது ஷங்கர் படம் என்று சொல்ல ஒன்றும் இல்லை. அட்டை டூ காப்பி செய்து இருக்கிறார். ரீமேக் படமென்றால் வசனத்தைக்கூடவா மொழிமாற்றம் செய்யவேண்டும்? பாடல்களில் மட்டும் ஷங்கர் படமென தெரிகிறது. இதற்கு தானே நமது ரீமேக் ராஜா இருக்கிறார்.

சில லாஜிக் ஒட்டைகள் கூட.. ’நோக்கியா 1100’ 1998 வருவது போல் காட்டுகிறார்கள்.. 2003 ஆண்டு அறிமுகமானது மாதிரி என் நியாபகம்.


3 இடியட்ஸ்  பார்க்காதவர்களுக்கு நண்பன் ஒரு நல்ல அனுவத்தை தரும் பீல்குட் படம். கண்டிப்பாக பார்க்கலாம்!


January 08, 2012

ஒஸ்தியாயிருந்து நாஸ்தியான‌ க‌தை!

ப‌ல‌ (புர‌ட்சி)போராட்டங்க‌ளுக்கு பிற‌கு, நேற்றிர‌வு க‌ண்முழித்து இந்த‌ ப‌ட‌த்தை பார்த்தே ஆவ‌தேன‌ முடிவு செய்து, எங்க‌ள் அறையின் ஐவ‌ர் குழு தீர்மான‌ம் போட்ட‌து. விதி வ‌லிய‌து! இந்த‌ ப‌ட‌த்தை வ‌லையுல‌கில் துவைத்து கிழித்து காய‌வைத்து ப‌ல‌ பேர் வடாம் போட்டிருந்தாலும் அப்ப‌டி என்ன‌ தான் செய்திருக்கிறார் நம்ம‌ சிம்பு ம‌ன்னிக்க‌, ந‌ம்ம‌ எஸ்.டி.ஆர் என்று பார்க்க‌லாமே என்று நினைத்தோம்.

'யாருக்கு யாரோ' வைக்கூட‌ முழுதும் பார்க்க‌முடிந்தது. ஆனால் இந்த‌ ஒஸ்தி.. யப்பா முடியல‌!!

முக‌னூலில் ஒருவ‌ர் எழுதிய‌து நியாப‌க‌த்திற்கு வ‌ருகிற‌து, "ஒஸ்தி ப‌ட‌த்துல‌ சிம்பு போட்ருக்க‌ற‌ டிர‌ஸ் எந்த‌ ஸ்கூல் யுனிபார்ம்?" இதைவிட‌ சிம்புவின் க‌தாப்பாத்திர‌த்தை விவ‌ரிக்க‌ முடியாது. இந்த ப‌ட‌த்துக்கு எதுக்கு ஒரு கதானாய‌கி என்று இன்னும் புரிய‌வில்லை!

த‌ர‌ணி! நீங்க இன்னும் குருவில‌ இருந்து மீளமுடியாம‌ல் இருக்கிங்க‌ங்க‌ற‌து அந்த‌ பைட் சீன்ல‌யே தெரியுது. காதுல‌ பூ வைங்க, ஆனா பூக்க‌டையே மாட்டினீங்கனா காது அந்துரும்! த‌ய‌வு செய்து FROM THE DIRECTOR OF GILLI, THOOL, GILLI போடாதீங்க‌!

இன்னும் ஒரு "விண்னைதாண்டி வ‌ருவாயா" இல்ல‌ ஒரு "கில்லி"க்காக‌ காத்திருக்கும் ஒரு ர‌சிக‌ன்!

பட‌த்த‌ கூட‌ பார்த்த‌ர‌லாம், ஆனா கீழ‌ இருக்க‌ற‌ காணொளிய‌...

December 05, 2011

தப்பு தப்பா இருக்கே