October 28, 2011

வேலாயுதம் - விமர்சனம்

’புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் அரசியலில் பிஸி ஆகிவிட்டதாலும், ஆஸ்திரேலிய திவிரவாதிகளுடன் போரிட சென்றுவிட்டாதாலும் பாகிஸ்தான் திவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க இதோ நமது ‘இளைய தளபதி’ புறப்பட்டு விட்டார்!!

யார் இந்த வேலாயுதம்?

மேற்ச்சொன்ன காரணத்தினால் துளிர் விட்டுப்போன பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒரு தமிழ்நாடு ’ச.ம.உ’ வோடு கைகோர்த்து சென்னையில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கிறார்கள். இதை தெரிந்து கொண்ட ஒரு பத்திரிக்கை பெண் நிருபரை (ஜெனிலியா) தாக்குகிறார்கள். கூவத்திலே வீசுகிறார்கள். ஆனால் அவள் ரத்தகாயங்கலோடு தப்பிகிறாள். தற்செயலாக நிருபரை தாக்கியவர்கள் ஜீப் வெடித்து அங்கேயே இறக்கிறார்கள். தீய சக்திகளை அழிக்க ‘வேலாயுதம்’ என்கிற கற்பனை மனிதனை உருவாக்குகிறாள். மேலும் திவிரவாதிகள் வைத்துள்ள குண்டுகளை அழித்து அவர்களையும் அழிப்பேன் என ’வேலாயுதம்’ எழுதியதாக ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறாள்.

இந்த வேளையில் தன் தங்கையின் (சரண்யா மோகன்) திருமண விஷயமாக சென்னை வருகிறார் ’வேலாயுதம்’ (விஜய்). எதேட்சயாக அவர் செய்யும் காரியங்களால் வெடிகுண்டுகளை களைகிறார், சில துஷ்டர்களை சம்காரம் செய்கிறார். ஊரே வேலாயுத்தை கொண்டாடுகிறது. தான் கற்பனையாக உருவாக்கிய ’வேலாயுதம்’ உண்மையிலே இருப்பதை தான் நினைத்ததை நடத்துவதை அறிந்த பெண் நிருபர் வேலாயுதத்தை சந்தித்து நடந்ததை கூறுகிறாள். உண்மையான வேலாயுதம் கற்பனை வேலாயுததுக்கு உயிர் கொடுக்கிறார். பாகிஸ்தான் திவிரவாதிகளையும், அந்த ’ச.ம.உ’யும் எப்படி அழிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க...

  படத்தின் முதல் பாதியை பார்க்கும் போது ‘திருப்பாச்சி 2ம் பாகமா!’ என்று தோன்றுகிறது. வேலாயுதம் பால்காரர் என்கிறார்கள். ஆனால் பாலுத்துரத தவிர ’கோழி’யும் நல்லா புடிக்கிறார். நல்ல வேளயா இந்த படத்துல ஜெனிலியா லூசுப் பொண்ணில்ல!!.ஹன்சிகா  அந்த பொறுப்ப எடுத்துக்கிட்டு நல்ல ’நடிச்சு காட்டிருக்காங்க’. இவங்களுக்கு டப் பண்ணவங்க ரொம்ப கஷ்டபட்டிருக்கனும். வாயும் வசனமும் ஸிங்கே ஆவ மாட்டிங்குது! சந்தானம் வரும்போது தியேட்டரே கலகலப்பாகுது. முதல் பாதிய விட, ரெண்டாம் பாதிதான் படமே சூடு புடிக்குது. ’முளைச்சு முணு’ பாட்டு மனசுல நிக்குது! எனோ படத்துல விஜய்க்கு நல்ல டான்ஸ் மூவ்மெண்டே இல்ல. நண்பன்ல ஏமாத்திடாதிங்க சார்!!!

’இயக்குனர்’ ராஜா தன் சேப் சோனான ரீமேக் குதிரயில நல்லவே பயணம் செய்யுரார். எப்ப சார் சொந்தமா படம் எடுப்பீங்க??

நீங்கள் விஜய் ரசிகராக இருந்தால் படம் ஒரு ’புல் மீல்ஸ் விருந்து’ இல்லயென்றால் ’அளவு சாப்பாடு’.

டிஸ்கி:
  • ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ட்ரேயிலர் போட்டங்க. நல்லா இருந்தது!
  • எங்க ஊருல இருக்கிறதிலயெ QUBE சவுண்டு சிஸ்டம் இருக்கற ஒரே தியெட்டர் “சாமி தியேட்டர்”. அதனால டிக்கட் 120, 150. ஆனா  இரும்பு சேர்தான் போட்டிருக்காங்க!
  • தாய்மார்கள் கூட்டம் அதிகமா இருந்தது.
  • தியேட்டர் ஆப்பரேட்டர் ரொம்ப பாவம். ஒவ்வொரு தடவ ’கரண்ட் கட்’ டான போதும் அவர் குடும்பத்தையே திட்டி தீர்த்து சாந்தி அடஞ்சாங்க நம்ம ரசிகர்கள்.

October 26, 2011

ஏழாம் அறிவு - விமர்சனம்

16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னன் போதிதர்மனின் வரலாற்று முன்னுரையோடு படம் தொடங்குகிறது. நாம் மறந்துபோன ஒரு தமிழனை ஞாபகபடுத்தியதற்காக இயக்குனர் A.R. முருகதாஸிக்கு ஒரு பூச்செண்டு. சீனாவின் ஒர் கிராமத்தில், அந்நாளில் ஒரு விசித்திர நோயால் பாதிக்கப்படுக்கின்றனர். அந்நோயை இந்தியாவிற்கு வரவிடாமல் தடுக்க அங்கே செல்கிறார் போதிதர்மன். முதலில் அவரை ஏற்காத மக்கள், இறந்து போனாதாக அவர்களால் ஒதுக்கப்பட்ட குழந்தையை, தன் மருத்துவத்தால் குணப்படுத்திய பின் அவரை ஏற்றுக்கொள்வதோடு இல்லாமல் அவரை கடவுளாக போற்றுகின்றனர். அங்கே தான் கற்ற கலையையும் அவர்களுக்கு பயிற்றுகிறார். அக்கலையே இன்னாளில் ’குங்ஃபூ’ என்றழைக்கப்படுகிறது. பின்னர் தான் வந்த வேலை முடிவுற்றதென தாயகம் திரும்புவதாக அவர்களிடம் சொல்கிறார். ஆனால் ’அக்கிராம’ மக்கள் அவர் சென்றுவிட்டால் தங்கள் நாட்டிற்கு பெரும் சேதம் விழையுமென தவறாக ஆருடம் கணிக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவரை விசம் கொடுத்து கொல்கிறார்கள்.

இனி கதை இக்காலத்திற்கு திரும்புகிறது.

சர்க்கஸ் ஒன்றில் கலைக்கூத்தாடியாக வேலை செய்கிறான் அரவிந்த்(சூர்யா).  ஒரு சர்க்கஸ் குரங்கை தன் ஆராய்ச்சிக்காக இரவலாக கேட்க வருகிறாள் சுபா(ஸ்ருதிஹாசன்). தமிழ் சினிமாவின் ’தொன்றுதொட்ட’ கண்டவுடன் காதல் கொள்கிறான் கௌதம். ஆனால் ஆராய்ச்சிக்காக அவள் தேடி வந்தது குரங்கல்ல ’தான்’ தான் என்று கண்டுகொள்கிறான் அரவிந்த்.

போதிதர்மனின் சந்ததியான அரவிந்தின் மூலம் மீண்டும் போதிதர்மனின் பண்புகளை, அறிவை (ஏழாம் அறிவு!!) உயிர்ப்பிக்கலாம் என சுபா கௌதமிடம் எடுத்து கூறுகிறாள்.


இதற்கிடையில் சீனாவிலிருத்து ஆறாம் நூற்றாண்டில் பரவிய அதே கிருமியை இந்தியாவில் பரப்ப சீனா அரசால் ஏவப்பட்ட ஒருவனாக  டோங் லீ இங்கே களமிறக்கபடுகிறான். அப்புறம் ”நடந்தது என்ன?” என்பதை வெண் திரையில் காண்க...

படம் முழுதும் சூர்யா அனாசயம் செய்கிறார். போதிதர்மனாகவும்,அரவிந்தாகவும் பின்னுகிறார். ஸ்ருதி நடிப்பு ஒகெ ரகம். தன் நண்பன் இறந்த காட்சியில் அவர் அழுவதில் ஏனோ ’மகாநதி’ கமல் தெரிகிறார். சரியான வில்லானாக Johnny Tri Nguyen சூர்யாவையும் நம்மையும் பயப்பட வைக்கிறார். Warm Welcome Mr.Johnny Tri Nguyen. பாடல்களில் ‘முன்அ ந்தி’, ‘யெம்மா யெம்மா’ இனி சிலகாலம் நம் உதடுகளில் முனுமுனுக்கும். ’இன்னும் என்ன தோழா’ தமிழர்களுக்கான ட்ரிபூயூட்.

A.R. முருகதாஸின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் மிளிர்கிறது. வசனங்களிலும் முருகதாஸின் முத்திரை.

“இலங்கையில திருப்பி அடிச்சோம். என்னாச்சு? உயிர் போனது தான் மிச்சம்”

 இதற்கு சூர்யா பேசும் counter dialogue க்கு தியேட்டரில் செம கைத்தட்டல்.


இதை போல பல பளிச் வசனங்கள்..

கண்டிப்பாக தமிழர்களுக்கு இந்தப்படம் ஒரு விருந்து!!

டிஸ்கி: பழனி ரமேஸ் தியேட்டர்ல சாப்ட முட்டை போண்டா சூப்பர்!!!

October 20, 2011

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி! 
-
"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டுபந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. 

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
-
"
வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
"இந்த மாதிரி அமெரிக்கால்-லஇங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி" 
-
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"

"MBA, MS-
னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" 

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது. 

அப்பா : "சரி இவங்க போய் பேசின உடனே client projectகொடுத்துடுவானா?" 

"
அது எப்படிஇந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"
அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?" 

"
இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாதுஎன்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்கdeliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல,எங்களுக்கு இது வேணும்அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார். 
-
"
இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
-
அப்பா : "CR-னா?" 
-
"Change Request. 
இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
-
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
 அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?"
-
"
ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டுபாதி வெட்டிட்டு வர முடியுமா?"

அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"
முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும்ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு." 

"
அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."
அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – 
-
அப்பா குழம்பினார். 

"
நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."
-
"பாவம்பா" 

"
ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?" 

"
ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
-
அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"
"இவருக்கு கீழ டெக் லீட்மோடுல் லீட்டெவலப்பர்டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
-
அப்பா : "இத்தனை பேரு இருந்துஎல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?" 

"
வேலை செஞ்சா தானேநான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர்டெஸ்டர்னுஅவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம்மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லிநெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?   அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"
இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.
அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம்கால் பட்டா குத்தம்கறது மாதிரி."
"
ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?


"
அது எப்படி..சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
அப்பா:  "கிளையன்ட் சும்மாவா விடுவான்ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?" 

"
கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
-
அப்பா : "எப்படி?" 

"
நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமினஉன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சுஇன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?" 

"
அப்படி பண்ணினாநம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?" 

"
ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும்அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
-
"அப்புறம்?" 

"
அவனே பயந்து போய்,
"
எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணுரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"
ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாதுவருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.


அப்பா  :  "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."

பி.கு: மின்னஞ்சலில் சிக்கியது!

October 18, 2011

டைரி - படிங்க


சிவகுமார் டைரி 1946-1975
”நான் இந்த புத்தகத்த ஒரே ராத்திரில படிச்சேண்டா”

இந்த வரிகள்  நண்பர்கள் சொல்லும் போது உள்ளாற ஒரு நமட்டு சிரிப்பு இருக்கும். நான் இந்த புத்தகத்த வாசிக்கும் வரை. 1946-லிருந்து 1975-வரைக்கும் தன் வாழ்வில் நடந்த சம்பவங்கள், பழகிய மனிதர்கள் மட்டுமில்லாது மிக முக்கியமாக தன் வாழ்க்கையை பற்றியும் சிலந்தி வலை போலே மிக நேர்த்தியாக பின்னியிருக்கிறார்.


ஆரம்பமே ’என் தாயுமானவளுக்கு’ என்று தன் மனைவிக்கு புத்தகத்தை சமர்பிக்கிறார். இளமையிலேயே தந்தையை இழந்தவர். தாயின் அரவணப்பில் வளர்ந்தவர். தனது மாமாவின் உதவியோடு தன் ஒவியக்கலையை வளர்த்துக்கொண்டார். அந்நாளில் பஞ்சம் நிலவியாதாம் தமிழ் நாட்டில்.
கற்றாழை, புளி, மற்றும் வெல்லம் சேர்த்து ஓர் உணவு சமைப்பார்களாம். சாப்பிட அல்வா போலிருக்குமாம். பசியாற உண்டு முடித்த சில வேளையில் வயிற்று போக்கு ஏற்படுமாம்!!
ஒவியக்கல்லூரியில் சேர சென்னை வந்து, புதுபேட்டையில் குடியிருந்தாராம். அந்த வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை தன் டைரியில் பதிவு செய்திருக்கிறார். படித்துமுடித்த பின் கண்ணில் கசியும் ஈரம் நீங்கள் படிக்கும் ‘டைரி’யில் விழும்.
சினிமாவிற்காக பல பேர் பல விஷயங்களை தியாகம் செய்திருப்பார்கள். இவர் தன் ’தெத்து’ பல்லை தியாகம் செய்திருக்கிறார்.  சினிமாவில் தான் கற்றதும் பெற்றதும் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். சொல்ல மறந்துவிட்டேன்!  நிறைய பேசியுமிருக்கிறார்.


புத்தகமெங்கும் அவர் வரைந்த ஒவியங்கள் வியாபித்திருக்கிறது. ‘டைரி’ சில கதை சொல்லும். அந்த ஒவியங்கள் பல கதை சொல்லும். புத்தகத்தின் கடைசி பக்கங்களில் அவருடய உண்மையான டைரியின் சில பக்கங்கள் உள்ளன.
என் குட்டி நூலகத்தில் இந்த புத்தகம் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. வாசித்து பாருங்கள் உங்கள் வீட்டிலும் இடம்பிடிக்கும்.

புத்தகத்தின் விலை: ரூ. 300
வாங்க இந்த சுட்டியை அழுத்துங்கள்.
படம்:The Hindu


October 15, 2011

பழநி- சில குறிப்புகள்

பழநி!

இந்த பெயரை கேட்டவுடன் பலருக்கு நினைவுக்கு வருவது ’பஞ்சாமிர்தம்’ அப்புறம் மொட்டை!. பல பேரோட கருத்து என்னானா, பழனினா உங்க தலைக்கு மட்டும் அல்ல, உங்க பர்சுக்கும் சேத்து மொட்ட அடிச்சுடுவங்கனுன்னு. காரணம் பல ஏமாத்து பேர்வழிக ஏராளமா இருப்பாங்க!
பழனில இருக்கற அதிகபட்ச பேரு நம்பி இருக்கறது அந்த மலைய மட்டும் தான். இது பெரிய தொழிற்சாலைகள் நிரம்பிய ஒரு ஊர் கிடையாது. அதனால இங்க எல்லா தொழில்களுக்கும் இந்த பழனி மலை தான் அச்சாணி. பல பேர் நேர்மையா தொழில் செஞ்சாலும், சில ஏமாத்து காரங்களால எல்லா பேரும் இந்த கேட்ட பேருக்கு ஆளாக வேண்டி இருக்கு.

ஒரு உதாரணத்துக்கு, நீங்க வெளியூர்ல இருந்து வர்றீங்கங்கறது உங்களோட நடவடிக்கய பார்த்தே சுலபமா கண்டுபுடிச்சுவாங்க. அதானால சன்னதி தெருல நடந்து போகும்போதெ பல குரல்கள் உங்கள வழி மறிக்கும். ‘சார், செருப்ப இங்கயே விட்டுட்டு டோக்கன் வாங்கிங்க’. சரின்னு நிங்களும் அங்கேயெ வீட்டிங்கன்னா பத்து ரூபா கூட கேப்பாங்க. ஆனா மலையோடா அடிவாரம் போகும்போது ‘இலவச காலணி காப்பகம்’ உங்க கண்ணுல படும்.

இங்க வர்ரதுக்கு முன்னாடியே தெரிஞ்சவங்ககிட்டயோ, இங்க வந்து போனாவங்ககிட்டயோ இந்த மாதிரி விசயத்த விசாரிச்சிங்கன்னா நல்லது.

மலை மேல போறத்துக்கு ரோப்கார் (Rope Car) இல்ல இழுவை ரயில் (Winch) ஒரு நல்ல அனுபவம். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்கல வாராம மத்த நாட்கள்ள வந்தீங்னா நல்ல தரிசனம் பார்கலாம்.

பழனிக்கு இப்பொ வரனும்னா ஒரே வழி பஸ்தாங்க. ரயில்ல வரனும்னா இன்னும் சில மாசங்க காத்திருக்கனும். சென்னைல இருந்து வரனும்னா இரவு 7.30 க்கு ஒரு SETC பஸ் (வழி:சென்னை-திருச்சி-திண்டுக்கல்-பழனி) இருக்கு. தனியார் வண்டிகளும்  நிறைய இருக்கு.

இன்னும் எழுத நிறைய விசயம் இருக்கு, ஆனா டைப்புரது கொஞ்சம் கஷ்டாமா இருக்கு! அடுத்த பதிவுல பார்க்கலாம்!


October 14, 2011

பொதினிமலை

வணக்கம்!
தலைநகரம் சென்னையிலிருந்து சுமார் 470 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பொதினிமலை. அதன் இன்றைய பெயர் பழநி (பழம் + நீ). ’மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானல் இதனுள் அமைதிருப்பது இன்னும் ஒரு சிறப்பு!முதன்முதலாக வேலெடுத்து வீரத்துக்கு வித்திட்ட தமிழ் கடவுளான பழனி வாழ் தண்டாயுதபாணி குடிகொண்டிருப்பது இங்கேதான்!!

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு திருஆவினன்குடி.  இதன் பெயர் காரணம் கீழ் உள்ளவாறு;

திரு-திருமகள் 
-காமதேனு
வினன் -சூரியன்
கு- நிலமகள்
டி-அக்னி

பழனி மலையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ’சண்முகநதி’. இங்கு நீராடி சுவாமி தரிசனம் செய்வது மரபு.


சில அழகான காட்சிகள் உங்கள் பார்வைக்கு..