சிவகுமார் டைரி 1946-1975
”நான் இந்த புத்தகத்த ஒரே ராத்திரில படிச்சேண்டா”
இந்த வரிகள் நண்பர்கள் சொல்லும் போது உள்ளாற ஒரு நமட்டு சிரிப்பு இருக்கும். நான் இந்த புத்தகத்த வாசிக்கும் வரை. 1946-லிருந்து 1975-வரைக்கும் தன் வாழ்வில் நடந்த சம்பவங்கள், பழகிய மனிதர்கள் மட்டுமில்லாது மிக முக்கியமாக தன் வாழ்க்கையை பற்றியும் சிலந்தி வலை போலே மிக நேர்த்தியாக பின்னியிருக்கிறார்.
ஆரம்பமே ’என் தாயுமானவளுக்கு’ என்று தன் மனைவிக்கு புத்தகத்தை சமர்பிக்கிறார். இளமையிலேயே தந்தையை இழந்தவர். தாயின் அரவணப்பில் வளர்ந்தவர். தனது மாமாவின் உதவியோடு தன் ஒவியக்கலையை வளர்த்துக்கொண்டார். அந்நாளில் பஞ்சம் நிலவியாதாம் தமிழ் நாட்டில்.
கற்றாழை, புளி, மற்றும் வெல்லம் சேர்த்து ஓர் உணவு சமைப்பார்களாம். சாப்பிட அல்வா போலிருக்குமாம். பசியாற உண்டு முடித்த சில வேளையில் வயிற்று போக்கு ஏற்படுமாம்!!
ஒவியக்கல்லூரியில் சேர சென்னை வந்து, புதுபேட்டையில் குடியிருந்தாராம். அந்த வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை தன் டைரியில் பதிவு செய்திருக்கிறார். படித்துமுடித்த பின் கண்ணில் கசியும் ஈரம் நீங்கள் படிக்கும் ‘டைரி’யில் விழும்.
சினிமாவிற்காக பல பேர் பல விஷயங்களை தியாகம் செய்திருப்பார்கள். இவர் தன் ’தெத்து’ பல்லை தியாகம் செய்திருக்கிறார். சினிமாவில் தான் கற்றதும் பெற்றதும் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். சொல்ல மறந்துவிட்டேன்! நிறைய பேசியுமிருக்கிறார்.
புத்தகமெங்கும் அவர் வரைந்த ஒவியங்கள் வியாபித்திருக்கிறது. ‘டைரி’ சில கதை சொல்லும். அந்த ஒவியங்கள் பல கதை சொல்லும். புத்தகத்தின் கடைசி பக்கங்களில் அவருடய உண்மையான டைரியின் சில பக்கங்கள் உள்ளன.
என் குட்டி நூலகத்தில் இந்த புத்தகம் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. வாசித்து பாருங்கள் உங்கள் வீட்டிலும் இடம்பிடிக்கும்.
புத்தகத்தின் விலை: ரூ. 300
வாங்க இந்த சுட்டியை அழுத்துங்கள்.
படம்:The Hindu
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment
திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்