December 05, 2011

தப்பு தப்பா இருக்கே

December 04, 2011

மயக்கம் என்ன - விமர்சனம்மனதிற்கு பிடித்த வேலை அமைவது அனைவருக்கும் அமைவதில்லை! சின்ன குழந்தைகளை கேட்டிங்கனா நான் பெரிய‌வ‌னான‌தும் டாக்ட‌ர் ஆவேன், எஞ்சினிய‌ர் ஆவேனு. ஆனா எத்த‌ன‌ பேரு அந்த‌ வார்த்தைய‌ த‌ன்னோட‌ வாழ்க்கையாக்கி ஜெயிக்கிறாங்க‌ங்க‌ற‌து தெரிய‌ல‌. 10 வ‌து 12 வ‌து தேர்வு முடிவுக‌ள் வ‌ந்த‌தும் தொலைக்காட்சில‌ பார்த்தா இதே வ‌ச‌ன‌ங்க‌ள‌ கேட்க‌லாம்.  அழ‌கி போட்டில‌ ஜெயிச்ச‌வ‌ங்க‌ சொல்ல‌றது,"எய்ட்ஸ் விழிப்புண‌ர்வு பிரசார‌ம் செய்வேன், ஏழை எளிய‌வ‌ர்க‌ளுக்கு சேவை செய்வேன்". ஆனா சினிமால‌ சீக்கிர‌ம் கதானாய‌கி ஆயிடுவாங்க‌.

கார்த்திக் சுவாமினாத‌ன்(த‌னுஷ்)ஒரு வைல்ட் லைப் போட்டோகிராப‌ராக‌ ஆக‌ போராடும் ஒரு இளைஞ‌ன். அவ‌னுக்கு ஒரு த‌ங்கை ம‌ற்றும் நான்கு உயிர் ந‌ண்ப‌ர்கள். த‌ன் ந‌ண்ப‌ன் சுரேஷின் காதலியாக‌ கார்த்திக்கு அறிமுக‌மாகிறாள் யாமினி(ரிச்சா). மோத‌லில் ஆர‌ம்பித்த‌ இவ‌ர்க‌ள‌து ச‌ந்திப்பு பின் வ‌ழ‌க்க‌ம்போல‌ காத‌லாக‌ மாறுகிற‌து. ஆனால் த‌ன் ந‌ண்ப‌னின் ந‌ட்பை ம‌தித்து வில‌கி நிற்கிறான் கார்த்திக். ஆனால் சுரேஷின் அப்பா யாமினி கார்த்திக்கை விரும்புவ‌தை அறிந்து இருவ‌ருக்கும் திரும‌ண‌ம் செய்து வைக்கிறார்.

இதே வேள‌யில் தான் மான‌சீக‌ குருவாக‌ நினைக்கும் மாதேஸ் என்கிற‌ பெய‌ர்போன‌ வைல்ட் லைப் போட்டோகிராப‌ர் கார்த்திக்கின் போட்டோவை த‌னது என்று கூறி விருது பெறுகிறார். இதை தாங்க‌ முடியாத கார்த்திக் ஒரு ஹோட்ட‌லின் பால்க‌னியிலிருந்து விழுந்து த‌ற்கொலை செய்து கொள்ள‌முய‌ல்கிறான். த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளாளும், ம‌னைவியாலும் உயிர் பிழைக்கிறான்.

இருந்தாலும் அந்த‌ அதிர்ச்சி அவ‌னுக்கு ம‌ன‌ப்பிற‌ள்வை ஏற்ப‌டுத்துகிற‌து. மீண்டும் உயிர் பிழைத்த‌ கார்த்திக் த‌ன் ல‌ட்சிய‌த்தை அடைந்தான‌ என்ப‌தை திரையில் காண்க‌...


த‌னுஷ்க்கு ந‌ல்ல‌ தீனி போட்டிருக்கிறார் செல்வா. ந‌டிப்பிலும் பின் பாட‌லாசிரிய‌ராக‌வும் பின்னுகிறார். சொல்ல‌ப்போனால் த‌னுஷ் இல்லாத‌ பிரேமே ப‌ட‌த்தில் இல்லைனு சொல்ல‌லாம். ரிச்சா.. என்னாமா ந‌டிச்சிருக்கு இந்த‌ பொண்ணு!! கொஞ்ச‌ம் விட்டா த‌னுசை தூக்கி சாப்டிருப்பாங்க‌. த‌ன் க‌ருவில் இருந்த‌ குழ‌ந்தையை இழ‌க்கும் போது இவ‌ர‌து ந‌டிப்பு 'ந‌ச்'. சுரேஷாக‌ வ‌ரும் கேர‌க்ட‌ர் மாதிரி ஆள் இருப்பாங்க‌ளாங்க‌ற‌து  ச‌ன்தேகமா இருக்கு!! இவ‌ரு அம்மாஜியா? இல்ல‌ கேணையா?

"ஏம்பா என‌க்கும் ஒரு காப்பி கொடேன். எம்பொண்டாட்டியா எப்ப‌வுமே இவ்வ‌ள‌வு அழ‌கா பார்த்தில்லை" என்று அந்த தாத்தா சொல்லும் பொது தியேட்டர்ல செம கைத்தட்டல்.. இந்த மாதிரி சில நல்ல காட்டிகள் இருந்தாலும் மெதுவாக நகரும் திரைக்கதை படத்தின் மைனஸ் :(. செல்வா படத்தில் வரும் ஹிரோக்கள் என் கொஞ்சம் 'கழண்ட' மாதிரியே இருக்காங்க ?

படத்தின் முக்கியமான ஹிரோக்கள் ராம்ஜியும், ஜி.வி. பிரகாசும். அருமையான ஒளிப்பதிவு , கதையை பாதிக்காத இசை மற்றும் பின்னணி இசை. வெல்டன்!!

படம் எனக்கும் என் கூட வந்த என்னிரு நண்பகர்களுக்கும் பிடித்திருந்தது


November 23, 2011

என்ன விலை அழகே!!!
November 21, 2011

Aliaa Magda Elmahdy – என்ற தைரியசாலி (அ) பைத்தியக்காரி


பதின்ம வயது முடிந்து 20 –ம் பிறந்த நாளில் நாம் என்ன செய்திருப்போம். கோவிலில் நம் பெயருக்கு ஒரு அர்ச்சனை, நண்பர்களுடன் கொண்டாட்டம், காதலன் காதலியுடனோ, காதலி காதலனுடனோ எங்காவது ஊர் சுற்ற, மற்றும் இதர லட்சத்தி பதினெட்டு வழிகளிலும் முயலுவோம். ஆனால் ஒரு 20- பிறந்த நாளில் உலகையே தன் பக்கம் திருப்பவேண்டும் என எண்ணியிருப்போமா? பெண்கள் ஒடுக்கப்பட்ட சமுகத்தில் ஓங்கி அடித்தாற்ப்போல ஒரு கருத்து சொல்லவேண்டுமென நினைப்போமா?

ஒருத்தி நினைத்தாள்!! அவள் பெயர் அலிகா மக்தா எல்மஹ்டி. 20 வயது எகிப்திய ஒரு பெண்ணியவாதி, பதிவர்!, நாத்திகவாதி என்று தன்னைப்பற்றி கூறுகிறாள். 
தன்னைத்தானே நிர்வாணமாக புகைப்படமெடுத்து 

"Put on trial the artists' models who posed nude for art schools until the early 70s, hide the art books and destroy the nude statues of antiquity, then undress and stand before a mirror and burn your bodies that you despise to forever rid yourselves of your sexual hangups before you direct your humiliation and chauvinism and dare to try to deny me my freedom of expression."


என்று சொல்லி ஒரு வலைப்பூவில் பதிவேற்றினாள். இன்று உலகமே அந்த வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறது!! பைத்தியக்காரத்தனம் என்று சில பேர் கருத்து கூறுகிறார்கள். அவள் தைரியசாலி என்கிறார்கள் சிலர்.
 இதுபற்றி #NudePhotoRevolutionary என்று ட்விட்டரில் தனி விவாதமே நடக்கிறது.
இதுவரை 37 லட்சம் ஹிட்டுகளைத்தாண்டி(!!!) சென்று கொண்டிருக்கிறது அவளது வலைப்பூ http://arebelsdiary.blogspot.com

சி.என்.என் ல் வந்த அவளது நேர்காணல் சுட்டி

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


November 18, 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம் – சினிமா விமர்சனம்


படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவிட்டால் பாழாய் போவது இந்த சமூகம் தான் என்று கூறும் நாஞ்சில்நாட்டு உண்மைக்கதை!!
சாராயக் கடத்தல் தொழிலையே ஆதாரமாகக் கொண்ட குமரி மாவட்டத்தில் வாழும் சுந்தரம்(கரண்) ஒரு பி.ஏ., பி.எட்., பட்டதாரி. அவன் கனவு ஒரு நல்ல அரசு வேலையில் சேர்வது. தன் வீட்டில் விவசாய பட்டதாரியான ஒருவரை குடி வைக்கிறான். வறுமையில் வாடும் அவர், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்கிறார். இந்த சம்பவம் சுந்தரத்தின் நல்லெண்ணத்தை அசைத்துப்பார்க்கிறது.

’சாலை’ (சரவணன்) கள்ளகடத்தல் பொருட்களைக் கடத்தும் ஒரு லாரி டிரைவர். ஒரு எதிர்பாரா சமயத்தில் சிறையில் மாட்டிக்கொள்ளும் சுந்தரத்தின் உயிரைக் காப்பாற்றி சுந்தரத்தின் நண்பனாகிறான். பின் ஒரு கடத்தலின் போது நன்றிகடனாக ’சாலை’யின் உயிரைக் காக்கிறான்.


லூர்து மேரி (அஞ்சலி) சுந்தரம் படித்த கல்லூரியில் படிக்கும் மாணவி. சுந்தரத்தின் நல்ல கல்வி அறிவால் ஈர்க்கப்படுகிறாள். காதல் வயப்படுகிறாள்.
காதல் கனிய நமக்கு ஒரு நல்ல டூயட் பாடல் கிடைக்கிறது!!
’சிலுவை’ லூர்து மேரியின் அப்பா. 28 வருடமாக சாராயத்தொழில் கொடிகட்டி பறப்பவர். தன் மனைவியையும், நண்பர்களையும் கொன்றவனை உயிருடன் காரில் வைத்து கொன்று, அதே காரில் குழி தோண்டி புதைத்துவிடுகிறான்.

சுந்தரத்தின் அப்பா வீட்டின் மீது வாங்கிய வங்கிக்கடனுக்கு சுந்தரத்தின் வீடு ஏலத்தில் விடப்படும் என்று ஓலை வருகிறது. 11 நாள் கெடுவில் வீட்டை மீட்டுக்கொள்ள வங்கி ஊழியர்கள் கூறுகிறார்கள். பணத்திற்க்காக பல பக்கம் அலையும் சுந்தரத்திற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இறுதியில் தான் எந்த தொழிலுக்கு வரக்கூடாது என்று எண்ணுகிறானோ அதே கடத்தல் தொழிலில் ஈடுபட வேண்டியதாகிறது. 28 வருடமாக அதே தொழிலில் இருக்கும் சிலுவை சுந்தரத்தை என்ன செய்தார்? தன் மகளின் காதலை ஏற்றுக்கொண்டாரா? சுந்தரத்தின் அரசு வேலைக்கனவு நிறைவேறியதா? என்ற கேள்விகளுக்கு விடை திரையில் காண்க…

வெட்டொத்தி சுந்தரமாக வாழ்ந்திருக்கிறார் கரண். மலையாள வாசம் கலந்த தமிழில் அவர் பேசும் போது ’குமரி மாவட்டத்துகாரார்’ என சொல்ல தோன்றுகிறது! அஞ்சலிக்கு அல்வா சாப்பிடுவது போல் ஒரு கதாப்பாத்திரம். ஏற்கனவே ‘அங்காடித் தெரு’ வில் வாழ்ந்த அனுபவம் கை கொடுக்கிறது. தன் தோழியிடம் ”ஏன் கரணை காதலிதேன்?” என்று கூறும்போது நடிப்பில் மிளிர்கிறார். சரவணன்க்கு மீண்டும் ஒரு நல்ல எண்ட்ரி. தன்னால் வீட்டை மீட்க பணம் கொடுக்க முடியவில்லை என்னும் போது இவரின் நடிப்பு நம்மை கவர்கிறது. கஞ்சா கருப்பு படத்தில் இருக்கிறார். சிலுவையாக நடித்து இருப்பவர் நம்மை தன் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார்!! ’நந்தா’ சரவணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசை வித்யாசாகர். கொலைகாரி… பாடல் முனுமுனுக்க வைக்கிறது. மற்றபடி பாடல்களில் வித்தயாசம் இல்லை! எழுதி இயக்கியவர் வி.சி. வடிவுடையான். தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வரவு!
இந்தப்படம் குமரி மாவட்ட மக்களின் நட்பு, காதல், துரோகம், பழக்கம், பற்றி பேசுகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் இந்த படம் ஒரு நல்ல பொழுதுப்போக்கும் சித்திரமாக இருக்கும்!!

துணுக்கு: மு.க வின் பேரன் அறிவுநிதி படத்தின் இறுதியில் கவுரவ கதாப்பாத்திரத்தில் வருகிறார்

November 15, 2011

மாநகரமும் மாமனிதர்களும்!


சென்னையில் ஒரு காட்சி. சின்னமலை முதல் கிண்டி வரை தொடர்கிறது பேருந்து பயணம். இரவு 8 மணியை கடிகாரம் தொட்டுசெல்கிறது. ஹோட்டல் லைம் ட்ரீயை தாண்டுகிறது. பின் பாதையில் வந்த ஒரு காரின் கண்ணாடியை பதம் பார்க்கிறது. கண்ணாடி சுக்கு நூறாய் சாலையில் சிதறுகிறது. நத்தையாய் ஊர்ந்த பேருந்து திடிரென வேகம் எடுத்து சாலையில் பாய்கிறது. உள்ளிருந்த மக்கள் ”கார்க்காரன் மேலதான் தப்பு!” என்று பேருந்துக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். கிண்டி ரயில்வே ஸ்டேஷனை அடைக்கிறது. மின்னலென பாய்ந்து வந்து பேருந்தின் முன் நிற்கிறது கண்ணாடியை இழந்த கார்.
இரண்டு ஓட்டுனர்களும் தங்களின் தாயை மனதார வசவுகிறார்கள். போக்குவரத்து அதிகாரி சம்பவ இடத்தை அடைகிறார். வண்டிகளை காவல் நிலையத்துக்கு ஓட்டி செல்லப்பணிகிறார். நத்தையின் வேகத்தைவிட குறைவான வேகத்தில் நகர்கிறது பின்னால் வந்த வாகனங்கள். உடைந்த கண்ணாடிக்கு 1500 பேரம் பேசுகிறார்கள். தன் பாகத்தை வாங்க அந்த அதிகாரி காவல் நிலையம் வர சொல்லுகிறார். அமைதியாய் வேடிக்கை பார்க்கிறது உள்ளிருக்கும், வெளியிலிருக்கும் சனம்! நடத்துனர் வண்டியுள் விரைந்து யாராவது ஒருவரை சாட்சி சொல்ல அழைக்கிறார். யாரும் வரவில்லை!!.
இந்த காட்சிகளை பலர் தங்கள் கேமிரா மொபைலில் பதிவு செய்கிறார்கள்.
பெரிய வண்டியிடம், சிறிய வண்டி தோற்றுப்போய் செல்கிறது! வெளியில் இருந்த பயணிகள் பேருந்தில் ஏற பயணம் தொடர்கிறது.

யார் மீது குற்றம்? இதுவே நம் ஊராக இருந்தால்…?

November 12, 2011

டின்டின்–ன் சாகசங்கள் – விமர்சனம்

சிறுவயதில் ’இரும்பு கை மாயாவி’ கதைகளை படித்திருக்கிறேன். அதுவும் சொற்ப்பமான முறைகளே. சித்திர கதைகள் படிக்கும் ஆர்வமும், சூழலும் அமையப்பெறாதது என் துர்பாக்கியமே! ம்ம்ம்… எல்லோருக்கும் எல்லாமே அமைவதில்லையே.. சரி அந்தகதையை விடுங்கள் இந்த கதையைப் பார்ப்போம்.

டின்டின் – ஒரு துப்பறியும் நிருபர். ஒரு சுபயோக சுபதினத்தில் மார்கெட்டில். Unicorn என்னும் பொம்மைக் கப்பலின் அழகில் மயங்கி அதை 1 பவுண்டுக்கு வாங்குகிறான். அப்போதே தமக்கு அதை விற்று விடும்படி டின் டினிடம் எச்சரிக்கிறான் ஒருவன். ஆனால் அதை விற்பதில்லை என்று கூறி வீடு திரும்புகிறார்கள் டின் டினும் ஸ்னோவி என்னும் அவனது நாயும். பூனை ஒன்று வீட்டில் நுழைந்து நாயுடன் சண்டையிட்டு யுனிகார்னை உடைத்துவிடுகிறது. அப்போது அந்த பொம்மைக்கப்பலில் இருந்து ஒரு உருளை உருண்டு மேசையின் அடியில் மறைக்கிறது. டின் டினும் ஸ்னொவியும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் அந்த பொம்மைக்கப்பல் களவாடப்பட்டதை அறிகிறார்கள். சந்தேகமடைந்த டின்டின் தனக்கு கப்பலை விற்றுவிடுமாறு கூறிய Ivan Ivanovitch Sakharine விடம் செல்கிறான். அங்கே அதே போல ஒரு கப்பல் இருப்பதை அறிந்து ஏன் தன் கப்பலை திருடவேண்டும் என கேட்கிறான். சரியான பதிலளிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறான். அங்கே Ivan Ivanovitch Sakharine வேலயாள் ஒருவன் திருடிவந்தது கப்பலுக்காக அல்ல என்று ரகசியமாக  துப்புக்கூற மீண்டும் வீடு திரும்புகிறான். ஸ்னொவி மேசையின் அடியில் சுட்டிக்காட்ட அந்த உருளையை எடுக்கிறான் டின் டின். அதிலிருக்கும் ஒரு துண்டு சீட்டில் புதையலுக்கான ரகசியத்தின் ஒரு பகுதி கிடைக்கிறது. கண்டிப்பாக இதற்காக தன்னை தேடிவருவார்கள் என்று நம்புகிறான்.

இதே ரகசியத்தை அறிந்த போலீஸ் அதிகாரி ஆரம்பத்திலிருந்தே டிண்டினை பின் தொடர்கிறார். அந்த முழு ரகசியத்தை சொல்லி முடிக்கும் முன் எதிரிகளால் சுட்டு க்கொல்லப்படுக்கிறார் அந்த போலீஸ் அதிகாரி. அந்த போலீஸ் அதிகாரி சொன்ன குறிப்பிலிருந்த ஒரு கப்பலுக்கு கடத்தி செல்லபடுகிறான் டிண்டின்.
பின் அங்கிருந்து ஸ்னொவியின் உதவியால் தப்புகிறான். கப்பலில் Captain Haddock கை சந்திக்கிறான். கேப்டன் ஒரு ’குடிமகனாக’ இருக்கிறார் (இவரு வேற கேப்டனுங்க!!). அந்த புதையலை அறிந்த ஒரே நபரான கேப்டனை  Sakharine  ஒரு தனியறையில் அடைத்து வைக்கிறான். பின் டிண்டின், ஸ்னொவி, கேப்டன் மூவரும் கப்பலிலிருந்து தப்பிக்கிறார்கள். இவர்களுக்கு புதையல் கிடைத்ததா? இல்லயா என்பதை திரையில் பாருங்கள்…

என்னை இந்த படம் பார்க்க வைத்த மூன்று காரணங்கள்
1) ஸ்டிபன் ஸ்பீல்பெர்க்
2) பீட்டர் ஜாக்சன்
3) கார்டூன் 3டி படம்.கார்டூன் படங்களின் ஒரு நல்ல அம்சம் இயக்குனர் யாருக்காகவும் தன் கற்பனையை சற்றே குறைத்துக்கொள்ளத் தேவையில்லை. தான் நினைத்ததை திரையில் பதிவுசெய்யலாம். ஹீரோவுக்கு ’பஞ்ச்’ வசனங்கள், டூயட் பாட்டுக்கள், டூப் சண்டைக்காட்சிகள் வைக்கத் தேவையில்லை.
இதில் டானியல் கிரைக்- அதாங்க இன்றைய ஜேம்ஸ்பாண்டு. அவர் தான் Sakharine குரல் கொடுத்துள்ளார்.


Captain Haddock க்கு குரல் ஆண்டி செர்கிஸ் லார்ட் ஆப் த ரிங்ஸில் ஹாப்பிட்டாக வருமே ஒரு அனிமேடட் விலங்கு அதற்க்கு குரல் கொடுத்தவர் + அதில் நடித்தவர்.


கிளைமேக்சில் வரும் அந்த சண்டைக்காட்சி, கப்பலில் நடக்கும் சண்டைக்காட்சி. மிக அருமை. டிண்டினை விட Captain Haddock க்கே பல இடங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. டிண்டினை விட அந்த கதாப்பாத்திரமே என்னைக் கவர்ந்த்து. அப்புறம் அந்த ஸ்னொவி நாய் படம் முழுதும் ரகளை செய்கிறது. ரசிக்க வைக்கிறது!! டிண்டினுக்கு ஒரு கதாநாயகி இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி!!

மொத்தத்தில் குழந்தைக்களுடன் நீங்களும் ஒரு குழந்தையாக மாற கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

துணுக்ஸ்:
·         இது டிண்டின் காமிக்சில் வரும் பதினோராவது புத்தகமான The Adventures of Tintin: The Secret of the Unicorn அடிப்படையாக கொண்டது.
·         மோசன் கேப்சர் மூலம் தயாரிக்கப்பட்ட படம் பீட்டர் ஜாக்சனின் WETA ஸ்டியோவில் தயாரிக்கப்பட்டது. AVATAR, RISE OF THE PLANET OF THE APES போன்ற திரைப்படங்களை தந்த நிறுவனம். பீட்டர் ஜாக்சன் படத்தின் ஒரு தயாரிப்பாளரும் கூட.
·         சத்யம் திரையரங்கில் இந்தப்படத்தைப் பார்த்தேன்.
·         வேலாயுதம் போஸ்டரே சத்யம் தியேட்டரின் முன் பெரிய அளவில் உள்ளது.
·         “A FILM BY STEVEN SPIELBERG” என்று திரையில் வரும்போதே தியேட்டரில் ஒரே கைத்தட்டலும் விசில் சத்தமும்!!!
·         கேரளாவில் 3டி கண்ணாடிக்கு 100 ரூபாய் வாங்குவார்களாம், படம் முடிந்து கண்ணாடியைத் திருப்பி தரும்போது பணம் வாபஸ். ஆனால் இங்கே 20 ரூபாய் வாங்குகிறார்கள் திருப்பி தருவதில்லை!!
·         கார்டூன் படங்களில் ரத்தத்தை பார்க்க முடிவதில்லை. யாரையும் புண்படுத்தக்கூடாது என்பதை கடைப்பிடிக்கிறார்கள்.
படத்தின் ப்ரோமோசனுக்காக ஒரு ட்ரையினையே ஏற்பாடு செய்திருக்கிறார்கள்..

November 11, 2011

The Adventures of Tintin: The Secret of the Unicorn விமர்சனம்

விமர்சனம் நாளை இதே வலைப்பூவில்.. இப்போதைக்கு ட்ரைலர் மட்டும்...

November 07, 2011

மறக்க முடியுமா?

முதல்வன் படத்தில் ஒரு வசனம் வரும் “ வாழ்க்கைல டேப் ரெக்கார்டர்ல இருக்கற மாதிரி ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்”னு.
பால்ய கால நினைவுகளை அசைப்போடும் போது அவ்வளவு சந்தோசம்.
இத எழுதும்போதே என்னோட பத்தாவது வயசுக்கு தாவிப்போற மாதிரி இருக்கு!

அப்ப எங்க ஊருக்குள்ள டி.வி.ங்கறது ஏதோ காணக்கிடைக்காத பொக்கிஷம் மாதிரி. ரொம்ப சில வீட்டுலதான் இருக்கும். டி.வி இருக்கற வீட்டுக்கு போயி ’ஒலியும் ஒளியும்’ பாக்கறதுக்கு ஊரே திரண்டு வரும். சின்னபசங்க எல்லாம் முன்னாடி வரிசைல உக்காந்துகிட்டு, பெரியவங்கள் எல்லாம் பின்னாடி நம்மல ”சத்தம் போடாதீங்க கழுதைக்களா”  அதட்டிக்கிடே பார்த்த பாடல்கள் மனசுல இன்னைக்கும் ரீங்காரமிடுர கானம். சொர்க்கத்தின் வாசல்ல போய் வந்த சந்தோஷம். மறுபடியும் ‘சித்தரகார்’ ல போடற ஒரே ஒரு தமிழ் பாட்டுக்கு நாள் முழுதும் உக்காந்த நியாபகம் அப்டியே இருக்கு!!

இதே மாதிரி சந்தோசம் நம்ம வீட்லேயே அனுபவிக்கமுன்னு எங்களோட ஆசைய அப்பா நிறைவேத்தி வச்சார். ரோலிங் கதவு வச்ச ஒரு பிளாக் அண்ட் ஒயிட் ’சாலிடையர்’ டி.வி ஒன்னு எங்க வீட்ல புது மெம்பரா சேந்துச்சு. எப்பவாச்சும் ஒருவாட்டி தூர்தர்ஷன் நேஷனல் டி.வி தமிழ் படம் போடுவாங்க. அப்பறம் ஞாயித்து கிழமைல ஒரு தமிழ் படம் போட்டங்க. அப்ப மட்டும் ’உற்சவ மூர்த்தி’ மாதிரி டி.வி திண்ணைல தரிசனம் தரும்.

எப்படிடா இதுக்குள்ள இத்தன மனுசங்க இருக்காங்க? இவங்களுக்கெல்லாம் யாரு சாப்பாடு போடுவாங்க? அப்டினு முன்னாடி வரிசைல இருந்து குரல் வரும். ’தவிட்டு பிஸ்கட்’னு வட்டம், நீள்வட்ட சைசுல இருக்கும். அம்மா அங்க இருக்கற எல்லா சின்ன பசங்களுக்கும் கொடுப்பங்க. படம் முடிஞ்சதும் ’உற்சவரை’ மறுபடியும் திரை போட்டு முடிடுவாங்க. சித்தி பாசில கோர்த்த ஒரு ‘ஸ்டார்’ சைசுல தான் டி.வி யோட சாவி தொங்கிகிட்டுருக்கும்.

படம் மட்டும் இல்லமா அதுல வர்ற பல விளம்பரங்களும் ரொம்ப பிரசித்தம். ஒளிபரப்பு சேவை முடிஞ்சதும் சிவப்பு கலர் மாவுல தோச சுடுர மாதிரி டோ..டொ..டய்ங்னு ஒரு இசையொட முடியும்.

இப்ப வர்ற விளம்பரங்கல்ல ஏதாவது ஒன்னு ரெண்டுதான் மனசுல நிக்குது. ஆன அப்ப வந்த எல்ல விளம்பரமும் மனசுல நிக்கும். கீழ இருக்கற விளம்பரத்தை பாருங்க...

என்ன பொங்கலுக்கு ஊருக்கு போக டிக்கட் புக் பண்ண IRCTC போயிடீங்களா?? :-)... இங்க ஒரு சின்ன யோசன சொல்லிருக்கேன் முடிஞ்சா படிச்சு பாருங்க..


இன்னொரு மனதை தொட்ட விளம்பரம்...இனிவரப்போற குழந்தைகளுக்கு....

இதுக்கும் இதுக்கும்


என்ன சம்மந்தம்னு புரியுமா??


இந்த மாதிரி சந்தோஷம் இப்ப சன் டி.விலயோ மத்த சேனல் பார்க்கும் போது வர்றது இல்ல!! சமீபத்துல பாத்த விளம்பரதுல ரொம்ப புடிச்சது42 விநாடி வர்ற இந்த விளம்பரத்துல ஏதோ ஒரு கிராமத்துக்கு போய் வந்த மாதிரி ஒரு திருப்தி!!!


உங்களுக்கும் இந்த மாதிரி நினைவுகள் இருக்கும். அதையும் நான் எழுதறது புடிச்சிருத்தாலும், குறையிருந்தாலும் பின்னூட்டத்துல சொல்லுங்க....

அனுஷ்காவுக்கும் கலைஞானிக்கும் சமர்பணம்

உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
அழகு தேவதை அனுஷ்காவிற்கும் வாழ்த்துகள்!!November 05, 2011

தட்கலில் எளிமையாக முன்பதிவு செய்ய

சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே!. முன் ஏற்பாடு இல்லாத பயணத்திற்கு ரயில் பயணம் ஏற்றதல்ல.


அப்படியும் நாம் முன்பதிவிற்கு நுழையும் பொது எப்போதும் காத்திருப்போர் பட்டியலில் இடம் வாங்குதே வாடிக்கையாக இருக்கும். அதனால் பேருந்து பயணத்தையே நாடுவோம்.

பேருந்தில் இடம் கிடைக்காத நேரத்தில், கடைசி பிரமாஸ்திரம் தத்கால் டிக்கெட் பதிவதே!. அதுவும் சாதாரணமானது இல்லை. அதிருஷ்டமும், இணைய வேகமும் கை கொடுத்தால் மட்டுமே  சாத்தியம். அது என்னமோ இரண்டும் ஒரு சேர எனக்கு அமைந்தது மிக குறைவான தடவைகளே. சரி முடிந்தவரை முயற்சி செய்வோமே!!

பயணம் செய்யும் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டுமே நீங்கள் முன்பதிவு செய்ய முடியும். காலை 8 மணியிலிருந்து முன்பதிவு தொடங்கும். அடுத்த சில நிமிடங்களில்  டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிடும். ஆகவே முன்பதிவு செய்ய காலை
7.30  க்கு IRCTC இணையதளத்தில் நீங்கள் இருக்க வேண்டும்.

  • (ஸ்டேஷன்களுக்கான குறியீடுகளை தெரிந்து வைத்து கொள்வது உதவியாக இருக்கும்)

ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் வரும் 8 ம் தேதி பயணம் செய்ய இருக்கிறீர்கள் என்றால் 6 ம் தேதி முபதிவு செய்யலாம். காலை 7 .30  க்கு
 மணிக்கு  IRCTC  ல் நுழைந்துவிடுங்கள். புறப்படும் இடம் சேரும் இடம்  ஆகியவற்றை டைப்புங்கள். பின் 7 ம் தேதியை தேர்தெடுங்கள்.

QUOTA ல் TATKAL என்பதை தேர்தெடுக்கவும். FIND TRAINS பொத்தானை அழுத்தவும்.
நீங்கள் செல்ல வேண்டிய வண்டியை தேர்தெடுங்கள்.உங்கள் பெயர், வயது, படுக்கை வசதி, ஆகியவற்றை உள்ளிடு செய்யவும்

"Make  Payment " பக்கத்துக்கு செல்லவும். இப்போது மீண்டும் "Plan  my Travel " பக்கத்துக்கு வரவும். இனி நீங்க செய்ய வேண்டியது Session ஐ Expire ஆகாமல் மீண்டும் மீண்டும் "Find Trains " ஐ கிளிக் செய்யவும். தளத்தில் ஓடும் மணி 8 ஐ தொடும்போது வலது பக்கத்தில் 8 ம் தேதியில் "Book" ஐ கிளிக் செய்யவும்.
 
இனி நீங்கள் மேலே சொன்ன அதே வரிசையில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆனால் இணையமும், அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் இருக்க வேண்டும்.
 
டிஸ்கி:  (WWW.REDBUS.IN)  ரெட்பசில் புக் செய்யும் போது "TRAIN" என்ற 'கோட்' ஐ டைபி ரூபாய் 50  தள்ளுபடி பெறுங்கள்.