மனதிற்கு பிடித்த வேலை அமைவது அனைவருக்கும் அமைவதில்லை! சின்ன குழந்தைகளை கேட்டிங்கனா நான் பெரியவனானதும் டாக்டர் ஆவேன், எஞ்சினியர் ஆவேனு. ஆனா எத்தன பேரு அந்த வார்த்தைய தன்னோட வாழ்க்கையாக்கி ஜெயிக்கிறாங்கங்கறது தெரியல. 10 வது 12 வது தேர்வு முடிவுகள் வந்ததும் தொலைக்காட்சில பார்த்தா இதே வசனங்கள கேட்கலாம். அழகி போட்டில ஜெயிச்சவங்க சொல்லறது,"எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் செய்வேன், ஏழை எளியவர்களுக்கு சேவை செய்வேன்". ஆனா சினிமால சீக்கிரம் கதானாயகி ஆயிடுவாங்க.
கார்த்திக் சுவாமினாதன்(தனுஷ்)ஒரு வைல்ட் லைப் போட்டோகிராபராக ஆக போராடும் ஒரு இளைஞன். அவனுக்கு ஒரு தங்கை மற்றும் நான்கு உயிர் நண்பர்கள். தன் நண்பன் சுரேஷின் காதலியாக கார்த்திக்கு அறிமுகமாகிறாள் யாமினி(ரிச்சா). மோதலில் ஆரம்பித்த இவர்களது சந்திப்பு பின் வழக்கம்போல காதலாக மாறுகிறது. ஆனால் தன் நண்பனின் நட்பை மதித்து விலகி நிற்கிறான் கார்த்திக். ஆனால் சுரேஷின் அப்பா யாமினி கார்த்திக்கை விரும்புவதை அறிந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
இதே வேளயில் தான் மானசீக குருவாக நினைக்கும் மாதேஸ் என்கிற பெயர்போன வைல்ட் லைப் போட்டோகிராபர் கார்த்திக்கின் போட்டோவை தனது என்று கூறி விருது பெறுகிறார். இதை தாங்க முடியாத கார்த்திக் ஒரு ஹோட்டலின் பால்கனியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளமுயல்கிறான். தன் நண்பர்களாளும், மனைவியாலும் உயிர் பிழைக்கிறான்.
இருந்தாலும் அந்த அதிர்ச்சி அவனுக்கு மனப்பிறள்வை ஏற்படுத்துகிறது. மீண்டும் உயிர் பிழைத்த கார்த்திக் தன் லட்சியத்தை அடைந்தான என்பதை திரையில் காண்க...
தனுஷ்க்கு நல்ல தீனி போட்டிருக்கிறார் செல்வா. நடிப்பிலும் பின் பாடலாசிரியராகவும் பின்னுகிறார். சொல்லப்போனால் தனுஷ் இல்லாத பிரேமே படத்தில் இல்லைனு சொல்லலாம். ரிச்சா.. என்னாமா நடிச்சிருக்கு இந்த பொண்ணு!! கொஞ்சம் விட்டா தனுசை தூக்கி சாப்டிருப்பாங்க. தன் கருவில் இருந்த குழந்தையை இழக்கும் போது இவரது நடிப்பு 'நச்'. சுரேஷாக வரும் கேரக்டர் மாதிரி ஆள் இருப்பாங்களாங்கறது சன்தேகமா இருக்கு!! இவரு அம்மாஜியா? இல்ல கேணையா?
"ஏம்பா எனக்கும் ஒரு காப்பி கொடேன். எம்பொண்டாட்டியா எப்பவுமே இவ்வளவு அழகா பார்த்தில்லை" என்று அந்த தாத்தா சொல்லும் பொது தியேட்டர்ல செம கைத்தட்டல்.. இந்த மாதிரி சில நல்ல காட்டிகள் இருந்தாலும் மெதுவாக நகரும் திரைக்கதை படத்தின் மைனஸ் :(. செல்வா படத்தில் வரும் ஹிரோக்கள் என் கொஞ்சம் 'கழண்ட' மாதிரியே இருக்காங்க ?
படத்தின் முக்கியமான ஹிரோக்கள் ராம்ஜியும், ஜி.வி. பிரகாசும். அருமையான ஒளிப்பதிவு , கதையை பாதிக்காத இசை மற்றும் பின்னணி இசை. வெல்டன்!!
படம் எனக்கும் என் கூட வந்த என்னிரு நண்பகர்களுக்கும் பிடித்திருந்தது
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
4 comments:
paarththituvom... nalla vimarsanam..vaalththukkal
கருத்துக்கு நன்றி
nice review.
@சி.பி.செந்தில்குமார் நன்றி
Post a Comment
திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்