November 12, 2011

டின்டின்–ன் சாகசங்கள் – விமர்சனம்

சிறுவயதில் ’இரும்பு கை மாயாவி’ கதைகளை படித்திருக்கிறேன். அதுவும் சொற்ப்பமான முறைகளே. சித்திர கதைகள் படிக்கும் ஆர்வமும், சூழலும் அமையப்பெறாதது என் துர்பாக்கியமே! ம்ம்ம்… எல்லோருக்கும் எல்லாமே அமைவதில்லையே.. சரி அந்தகதையை விடுங்கள் இந்த கதையைப் பார்ப்போம்.

டின்டின் – ஒரு துப்பறியும் நிருபர். ஒரு சுபயோக சுபதினத்தில் மார்கெட்டில். Unicorn என்னும் பொம்மைக் கப்பலின் அழகில் மயங்கி அதை 1 பவுண்டுக்கு வாங்குகிறான். அப்போதே தமக்கு அதை விற்று விடும்படி டின் டினிடம் எச்சரிக்கிறான் ஒருவன். ஆனால் அதை விற்பதில்லை என்று கூறி வீடு திரும்புகிறார்கள் டின் டினும் ஸ்னோவி என்னும் அவனது நாயும். பூனை ஒன்று வீட்டில் நுழைந்து நாயுடன் சண்டையிட்டு யுனிகார்னை உடைத்துவிடுகிறது. அப்போது அந்த பொம்மைக்கப்பலில் இருந்து ஒரு உருளை உருண்டு மேசையின் அடியில் மறைக்கிறது. டின் டினும் ஸ்னொவியும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் அந்த பொம்மைக்கப்பல் களவாடப்பட்டதை அறிகிறார்கள். சந்தேகமடைந்த டின்டின் தனக்கு கப்பலை விற்றுவிடுமாறு கூறிய Ivan Ivanovitch Sakharine விடம் செல்கிறான். அங்கே அதே போல ஒரு கப்பல் இருப்பதை அறிந்து ஏன் தன் கப்பலை திருடவேண்டும் என கேட்கிறான். சரியான பதிலளிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறான். அங்கே Ivan Ivanovitch Sakharine வேலயாள் ஒருவன் திருடிவந்தது கப்பலுக்காக அல்ல என்று ரகசியமாக  துப்புக்கூற மீண்டும் வீடு திரும்புகிறான். ஸ்னொவி மேசையின் அடியில் சுட்டிக்காட்ட அந்த உருளையை எடுக்கிறான் டின் டின். அதிலிருக்கும் ஒரு துண்டு சீட்டில் புதையலுக்கான ரகசியத்தின் ஒரு பகுதி கிடைக்கிறது. கண்டிப்பாக இதற்காக தன்னை தேடிவருவார்கள் என்று நம்புகிறான்.

இதே ரகசியத்தை அறிந்த போலீஸ் அதிகாரி ஆரம்பத்திலிருந்தே டிண்டினை பின் தொடர்கிறார். அந்த முழு ரகசியத்தை சொல்லி முடிக்கும் முன் எதிரிகளால் சுட்டு க்கொல்லப்படுக்கிறார் அந்த போலீஸ் அதிகாரி. அந்த போலீஸ் அதிகாரி சொன்ன குறிப்பிலிருந்த ஒரு கப்பலுக்கு கடத்தி செல்லபடுகிறான் டிண்டின்.
பின் அங்கிருந்து ஸ்னொவியின் உதவியால் தப்புகிறான். கப்பலில் Captain Haddock கை சந்திக்கிறான். கேப்டன் ஒரு ’குடிமகனாக’ இருக்கிறார் (இவரு வேற கேப்டனுங்க!!). அந்த புதையலை அறிந்த ஒரே நபரான கேப்டனை  Sakharine  ஒரு தனியறையில் அடைத்து வைக்கிறான். பின் டிண்டின், ஸ்னொவி, கேப்டன் மூவரும் கப்பலிலிருந்து தப்பிக்கிறார்கள். இவர்களுக்கு புதையல் கிடைத்ததா? இல்லயா என்பதை திரையில் பாருங்கள்…

என்னை இந்த படம் பார்க்க வைத்த மூன்று காரணங்கள்
1) ஸ்டிபன் ஸ்பீல்பெர்க்
2) பீட்டர் ஜாக்சன்
3) கார்டூன் 3டி படம்.கார்டூன் படங்களின் ஒரு நல்ல அம்சம் இயக்குனர் யாருக்காகவும் தன் கற்பனையை சற்றே குறைத்துக்கொள்ளத் தேவையில்லை. தான் நினைத்ததை திரையில் பதிவுசெய்யலாம். ஹீரோவுக்கு ’பஞ்ச்’ வசனங்கள், டூயட் பாட்டுக்கள், டூப் சண்டைக்காட்சிகள் வைக்கத் தேவையில்லை.
இதில் டானியல் கிரைக்- அதாங்க இன்றைய ஜேம்ஸ்பாண்டு. அவர் தான் Sakharine குரல் கொடுத்துள்ளார்.


Captain Haddock க்கு குரல் ஆண்டி செர்கிஸ் லார்ட் ஆப் த ரிங்ஸில் ஹாப்பிட்டாக வருமே ஒரு அனிமேடட் விலங்கு அதற்க்கு குரல் கொடுத்தவர் + அதில் நடித்தவர்.


கிளைமேக்சில் வரும் அந்த சண்டைக்காட்சி, கப்பலில் நடக்கும் சண்டைக்காட்சி. மிக அருமை. டிண்டினை விட Captain Haddock க்கே பல இடங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. டிண்டினை விட அந்த கதாப்பாத்திரமே என்னைக் கவர்ந்த்து. அப்புறம் அந்த ஸ்னொவி நாய் படம் முழுதும் ரகளை செய்கிறது. ரசிக்க வைக்கிறது!! டிண்டினுக்கு ஒரு கதாநாயகி இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி!!

மொத்தத்தில் குழந்தைக்களுடன் நீங்களும் ஒரு குழந்தையாக மாற கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

துணுக்ஸ்:
·         இது டிண்டின் காமிக்சில் வரும் பதினோராவது புத்தகமான The Adventures of Tintin: The Secret of the Unicorn அடிப்படையாக கொண்டது.
·         மோசன் கேப்சர் மூலம் தயாரிக்கப்பட்ட படம் பீட்டர் ஜாக்சனின் WETA ஸ்டியோவில் தயாரிக்கப்பட்டது. AVATAR, RISE OF THE PLANET OF THE APES போன்ற திரைப்படங்களை தந்த நிறுவனம். பீட்டர் ஜாக்சன் படத்தின் ஒரு தயாரிப்பாளரும் கூட.
·         சத்யம் திரையரங்கில் இந்தப்படத்தைப் பார்த்தேன்.
·         வேலாயுதம் போஸ்டரே சத்யம் தியேட்டரின் முன் பெரிய அளவில் உள்ளது.
·         “A FILM BY STEVEN SPIELBERG” என்று திரையில் வரும்போதே தியேட்டரில் ஒரே கைத்தட்டலும் விசில் சத்தமும்!!!
·         கேரளாவில் 3டி கண்ணாடிக்கு 100 ரூபாய் வாங்குவார்களாம், படம் முடிந்து கண்ணாடியைத் திருப்பி தரும்போது பணம் வாபஸ். ஆனால் இங்கே 20 ரூபாய் வாங்குகிறார்கள் திருப்பி தருவதில்லை!!
·         கார்டூன் படங்களில் ரத்தத்தை பார்க்க முடிவதில்லை. யாரையும் புண்படுத்தக்கூடாது என்பதை கடைப்பிடிக்கிறார்கள்.
படத்தின் ப்ரோமோசனுக்காக ஒரு ட்ரையினையே ஏற்பாடு செய்திருக்கிறார்கள்..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

kumaran said...

சிறந்த விமர்சனம்.கண்டிப்பாக பார்க்க வேண்டும்..நன்றி.

jayaram thinagarapandian said...

கண்டிப்பா பார்க்க வேண்டும்...:)

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! குழந்தைகளையும் கூட்டி செல்லுங்கள்!!

Post a Comment

திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்