November 18, 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம் – சினிமா விமர்சனம்


படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவிட்டால் பாழாய் போவது இந்த சமூகம் தான் என்று கூறும் நாஞ்சில்நாட்டு உண்மைக்கதை!!




சாராயக் கடத்தல் தொழிலையே ஆதாரமாகக் கொண்ட குமரி மாவட்டத்தில் வாழும் சுந்தரம்(கரண்) ஒரு பி.ஏ., பி.எட்., பட்டதாரி. அவன் கனவு ஒரு நல்ல அரசு வேலையில் சேர்வது. தன் வீட்டில் விவசாய பட்டதாரியான ஒருவரை குடி வைக்கிறான். வறுமையில் வாடும் அவர், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்கிறார். இந்த சம்பவம் சுந்தரத்தின் நல்லெண்ணத்தை அசைத்துப்பார்க்கிறது.

’சாலை’ (சரவணன்) கள்ளகடத்தல் பொருட்களைக் கடத்தும் ஒரு லாரி டிரைவர். ஒரு எதிர்பாரா சமயத்தில் சிறையில் மாட்டிக்கொள்ளும் சுந்தரத்தின் உயிரைக் காப்பாற்றி சுந்தரத்தின் நண்பனாகிறான். பின் ஒரு கடத்தலின் போது நன்றிகடனாக ’சாலை’யின் உயிரைக் காக்கிறான்.


லூர்து மேரி (அஞ்சலி) சுந்தரம் படித்த கல்லூரியில் படிக்கும் மாணவி. சுந்தரத்தின் நல்ல கல்வி அறிவால் ஈர்க்கப்படுகிறாள். காதல் வயப்படுகிறாள்.
காதல் கனிய நமக்கு ஒரு நல்ல டூயட் பாடல் கிடைக்கிறது!!
’சிலுவை’ லூர்து மேரியின் அப்பா. 28 வருடமாக சாராயத்தொழில் கொடிகட்டி பறப்பவர். தன் மனைவியையும், நண்பர்களையும் கொன்றவனை உயிருடன் காரில் வைத்து கொன்று, அதே காரில் குழி தோண்டி புதைத்துவிடுகிறான்.

சுந்தரத்தின் அப்பா வீட்டின் மீது வாங்கிய வங்கிக்கடனுக்கு சுந்தரத்தின் வீடு ஏலத்தில் விடப்படும் என்று ஓலை வருகிறது. 11 நாள் கெடுவில் வீட்டை மீட்டுக்கொள்ள வங்கி ஊழியர்கள் கூறுகிறார்கள். பணத்திற்க்காக பல பக்கம் அலையும் சுந்தரத்திற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இறுதியில் தான் எந்த தொழிலுக்கு வரக்கூடாது என்று எண்ணுகிறானோ அதே கடத்தல் தொழிலில் ஈடுபட வேண்டியதாகிறது. 28 வருடமாக அதே தொழிலில் இருக்கும் சிலுவை சுந்தரத்தை என்ன செய்தார்? தன் மகளின் காதலை ஏற்றுக்கொண்டாரா? சுந்தரத்தின் அரசு வேலைக்கனவு நிறைவேறியதா? என்ற கேள்விகளுக்கு விடை திரையில் காண்க…

வெட்டொத்தி சுந்தரமாக வாழ்ந்திருக்கிறார் கரண். மலையாள வாசம் கலந்த தமிழில் அவர் பேசும் போது ’குமரி மாவட்டத்துகாரார்’ என சொல்ல தோன்றுகிறது! அஞ்சலிக்கு அல்வா சாப்பிடுவது போல் ஒரு கதாப்பாத்திரம். ஏற்கனவே ‘அங்காடித் தெரு’ வில் வாழ்ந்த அனுபவம் கை கொடுக்கிறது. தன் தோழியிடம் ”ஏன் கரணை காதலிதேன்?” என்று கூறும்போது நடிப்பில் மிளிர்கிறார். சரவணன்க்கு மீண்டும் ஒரு நல்ல எண்ட்ரி. தன்னால் வீட்டை மீட்க பணம் கொடுக்க முடியவில்லை என்னும் போது இவரின் நடிப்பு நம்மை கவர்கிறது. கஞ்சா கருப்பு படத்தில் இருக்கிறார். சிலுவையாக நடித்து இருப்பவர் நம்மை தன் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார்!! ’நந்தா’ சரவணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசை வித்யாசாகர். கொலைகாரி… பாடல் முனுமுனுக்க வைக்கிறது. மற்றபடி பாடல்களில் வித்தயாசம் இல்லை! எழுதி இயக்கியவர் வி.சி. வடிவுடையான். தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வரவு!
இந்தப்படம் குமரி மாவட்ட மக்களின் நட்பு, காதல், துரோகம், பழக்கம், பற்றி பேசுகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் இந்த படம் ஒரு நல்ல பொழுதுப்போக்கும் சித்திரமாக இருக்கும்!!

துணுக்கு: மு.க வின் பேரன் அறிவுநிதி படத்தின் இறுதியில் கவுரவ கதாப்பாத்திரத்தில் வருகிறார்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

கோவை நேரம் said...

விமர்சனம் அருமை .நேற்று தான் இந்த படம் பார்த்தேன் .அருமை .

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

வருகைக்கு நன்றி!

Anonymous said...

very good article. marai us nj

Post a Comment

திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்