November 07, 2011

மறக்க முடியுமா?

முதல்வன் படத்தில் ஒரு வசனம் வரும் “ வாழ்க்கைல டேப் ரெக்கார்டர்ல இருக்கற மாதிரி ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்”னு.
பால்ய கால நினைவுகளை அசைப்போடும் போது அவ்வளவு சந்தோசம்.




இத எழுதும்போதே என்னோட பத்தாவது வயசுக்கு தாவிப்போற மாதிரி இருக்கு!

அப்ப எங்க ஊருக்குள்ள டி.வி.ங்கறது ஏதோ காணக்கிடைக்காத பொக்கிஷம் மாதிரி. ரொம்ப சில வீட்டுலதான் இருக்கும். டி.வி இருக்கற வீட்டுக்கு போயி ’ஒலியும் ஒளியும்’ பாக்கறதுக்கு ஊரே திரண்டு வரும். சின்னபசங்க எல்லாம் முன்னாடி வரிசைல உக்காந்துகிட்டு, பெரியவங்கள் எல்லாம் பின்னாடி நம்மல ”சத்தம் போடாதீங்க கழுதைக்களா”  அதட்டிக்கிடே பார்த்த பாடல்கள் மனசுல இன்னைக்கும் ரீங்காரமிடுர கானம். சொர்க்கத்தின் வாசல்ல போய் வந்த சந்தோஷம். மறுபடியும் ‘சித்தரகார்’ ல போடற ஒரே ஒரு தமிழ் பாட்டுக்கு நாள் முழுதும் உக்காந்த நியாபகம் அப்டியே இருக்கு!!

இதே மாதிரி சந்தோசம் நம்ம வீட்லேயே அனுபவிக்கமுன்னு எங்களோட ஆசைய அப்பா நிறைவேத்தி வச்சார். ரோலிங் கதவு வச்ச ஒரு பிளாக் அண்ட் ஒயிட் ’சாலிடையர்’ டி.வி ஒன்னு எங்க வீட்ல புது மெம்பரா சேந்துச்சு. எப்பவாச்சும் ஒருவாட்டி தூர்தர்ஷன் நேஷனல் டி.வி தமிழ் படம் போடுவாங்க. அப்பறம் ஞாயித்து கிழமைல ஒரு தமிழ் படம் போட்டங்க. அப்ப மட்டும் ’உற்சவ மூர்த்தி’ மாதிரி டி.வி திண்ணைல தரிசனம் தரும்.

எப்படிடா இதுக்குள்ள இத்தன மனுசங்க இருக்காங்க? இவங்களுக்கெல்லாம் யாரு சாப்பாடு போடுவாங்க? அப்டினு முன்னாடி வரிசைல இருந்து குரல் வரும். ’தவிட்டு பிஸ்கட்’னு வட்டம், நீள்வட்ட சைசுல இருக்கும். அம்மா அங்க இருக்கற எல்லா சின்ன பசங்களுக்கும் கொடுப்பங்க. படம் முடிஞ்சதும் ’உற்சவரை’ மறுபடியும் திரை போட்டு முடிடுவாங்க. சித்தி பாசில கோர்த்த ஒரு ‘ஸ்டார்’ சைசுல தான் டி.வி யோட சாவி தொங்கிகிட்டுருக்கும்.

படம் மட்டும் இல்லமா அதுல வர்ற பல விளம்பரங்களும் ரொம்ப பிரசித்தம். ஒளிபரப்பு சேவை முடிஞ்சதும் சிவப்பு கலர் மாவுல தோச சுடுர மாதிரி டோ..டொ..டய்ங்னு ஒரு இசையொட முடியும்.





இப்ப வர்ற விளம்பரங்கல்ல ஏதாவது ஒன்னு ரெண்டுதான் மனசுல நிக்குது. ஆன அப்ப வந்த எல்ல விளம்பரமும் மனசுல நிக்கும். கீழ இருக்கற விளம்பரத்தை பாருங்க...





என்ன பொங்கலுக்கு ஊருக்கு போக டிக்கட் புக் பண்ண IRCTC போயிடீங்களா?? :-)... இங்க ஒரு சின்ன யோசன சொல்லிருக்கேன் முடிஞ்சா படிச்சு பாருங்க..


இன்னொரு மனதை தொட்ட விளம்பரம்...



இனிவரப்போற குழந்தைகளுக்கு....

இதுக்கும்



 இதுக்கும்






என்ன சம்மந்தம்னு புரியுமா??


இந்த மாதிரி சந்தோஷம் இப்ப சன் டி.விலயோ மத்த சேனல் பார்க்கும் போது வர்றது இல்ல!! சமீபத்துல பாத்த விளம்பரதுல ரொம்ப புடிச்சது



42 விநாடி வர்ற இந்த விளம்பரத்துல ஏதோ ஒரு கிராமத்துக்கு போய் வந்த மாதிரி ஒரு திருப்தி!!!


உங்களுக்கும் இந்த மாதிரி நினைவுகள் இருக்கும். அதையும் நான் எழுதறது புடிச்சிருத்தாலும், குறையிருந்தாலும் பின்னூட்டத்துல சொல்லுங்க....
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

ILA (a) இளா said...

இந்த விளம்பரம் எனக்கும் ரொம்ப புடிச்சதுங்க

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

:-)...கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!!

ananthu said...

மலரும் நினைவுகளுக்கு நன்றி ...

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

நன்றி நண்பா!!

Post a Comment

திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்